Friday, March 7, 2008

எனது அகம்

கேலி சித்திரம் போல்
கூரிய பற்களில்லை
நான்கு கால்களில்லை
காட்டில் உலவி திரியவுமில்லை
கண்ட இடத்திலும் நேரத்திலும் புணரவும் இல்லை ......
ஆனாலும் ரத்தமும் கலவியும் எப்போதும்கேட்கும்
மிருகம் ஒன்றை உள்ளடக்கியது தான்
நான் என்னும் மனிதன் .....
உற்று கண்களை பார்த்தால் ...
நீயும் மிருகம் கொண்டிருந்தால் ....
அதை ஒத்து கொள்ளும் வீரம் உன்னிடம் இருந்தால் ...
எனது மிருகமும் உனது மிருகமும் கை குலுக்கி கொண்டிருக்கலாம் ....